சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
X

குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுக்களை பெறும் ஆட்சியர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 339 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், இளையான்குடி வட்டம், கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததை யொட்டி, அவரது வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.100000-க்கான காசோலையினையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2000 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 03 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1465 வீதம் மொத்தம் ரூ.4395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.12000 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் இயற்கை விவசாயத்திற்கு இடுபொருட்களையும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.7500 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் இயற்கை விவசாயத்திற்கு இடுபொருட்களையும், மானாமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 07 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.518000 மதிப்பீட்டிலான கிசான் கடன் திட்டத்திற்கான ஆணைகளையும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 04 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.643895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

மேலும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 09 மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ச.ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) பி.சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!