சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கும் பொதுமக்கள்.

Public Grievance Redressal - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 420 மனுக்கள் பெறப்பட்டது.

Public Grievance Redressal -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 420 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைச்சாரா நலவாரியங்களின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பீட்டிலான ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், வருவாய்த்துறையின் சார்பில் காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைனையும், 1 பயனாளிக்கு முதிர்கன்னி ஓய்வூதியத்திற்கான ஆணையும், 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,840 மதிப்பீட்டில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு ரூ.99,999மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியும், 1 பயனாளிக்கு ரூ.7,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000 பரிசுத் தொகையினை எஸ்.புதூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜனுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.10,௦௦௦ பரிசுத் தொகையினை காளையார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 பரிசுத் தொகையினை கல்லல் வட்டத்தைச் சேர்ந்த அருள்சாமி ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.1,59,73 மதப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ம.ரா.கண்ணகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story