ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை கருவூலத்தில் சமர்பிக்கவேண்டும்:மாவட்ட ஆட்சியர்
பைல் படம்
றஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை கருவூலத்தில்; சமர்ப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறும் நேர்காணல் ஜூலை'2022 முதல் செப்டம்பர்'2022 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜீவன் பிரமான் என்ற இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், அசல் ஓய்வூதியப் புத்தகம் வாழ்நாள் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பயன்படுத்தி அஞ்சல் துறையின் வங்கி சேவையை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து கொள்ளலாம்.
அல்லது அரசு சேவா மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி செய்யலாம் அல்லது கருவூலகத்துறையின் மூலம் நடைபெறவுள்ள சிறப்பு முகாமை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் விண்ணப்பித்தினை என்ற இணையதளத்தில் வாயிலாக பதிவிறக்கம் செய்து ஓய்வூதியம் வங்கி கணக்கில் ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் யாராவது ஒருவரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலகத்திற்கு அனுப்பி நேர்காணல் செய்யலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்திரேட் நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம். ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu