அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க  சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்
X

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்

சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர்கள் சீர் வரிசையுடன் குழந்தைகளை அழைத்து வந்தனர்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது , அப்போது, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சீர் வரிசையுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை உத்தரவின் பெயரில் சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி, குமாரபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியை செல்வம் மலர் தலைமையில் மாணவர் விழா சேர்க்கை நடைபெற்றது.

இவ்விழாவில், கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் பாலாமணி ஆகியோர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளி நுழைவாயில் இருந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இவ்விழாவில், கலந்து கொண்ட குமாரபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சூரியகலா ராஜா, மாணவர்களுக்கு தேவையான நோட்டு மற்ற உபகரணங்களை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.


குமாரப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இதுவரை ஐந்து வகுப்புகளில் 65 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது, புதிதாக 16 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில், குமாரபட்டி கிராம அம்பலகாரர்கள் வீரணன், ராமசாமி, பள்ளி ஆசிரியர்கள் மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil