சிவகங்கை மாவட்டத்தில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில்,  கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
X

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,  சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளிய ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு பங்களிப்பு நிதியின் மூலம்; ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், திறந்து வைத்தார்.

இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில், ரூ.7.51 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள 135 மேஜை, இருக்கை செட்டுகளை பயன்பாட்டிற்கு வழங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்;.பெரியகருப்பன் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளியில்இ ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு பங்களிப்பு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை,மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் திறந்து வைத்தார். இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மேஜை, இருக்கைச் செட்டுகளை பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் , கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது,

தமிழக அரசு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்துவது மட்டுமின்றி, அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், தமிழகத்தில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அரசின் சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமன்றி அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தன்னர்வலர்களும் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் பல்வேறு பணிகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கு முன்னுதாரணமாக சிவகங்கை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கென அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தன்னர்வலர்களும் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

தமிழக அரசு, எதிர்கால சந்ததியினராகிய மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ.37000 கோடி மதிப்பீட்டில் அவர்களுக்கான எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, அவர்கள் சிறப்பான முறையில் பயில்வதற்கு ஏதுவாக பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களுடன் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, கல்விக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அதன்படி, எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கி சிறப்பித்துள்ளன. மேலும்இ ரூ.7.51 லட்சம் மதிப்பீட்டில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையிலான 135 மேஜை, இருக்கைச் செட்டுகள் ஆகியவைகளை இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் சார்பில் வழங்கியும் சிறப்பித்துள்ளன.

இதுபோன்று இன்னும் பல்வேறு பணிகளை கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினர்கள் கல்வியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்திடும் பொருட்டும் இதுபோன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் .இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்பாடு வளர்ச்சிக்கென அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வந்து அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மதுரை மண்டல மேலாளர் .டி.சுரேஷ்குமார், உதவி மேலாளர் கே.ஹரிஷ்ராம், இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மதுரை மேலாளர்.எம்.சிவகுருநாதன் உதவி மேலாளர் எம்.கார்த்திக் குமார் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன் ஊராட்சி மன்றத்தலைவர்கள் லட்சுமி (புழுதிப்பட்டிஜெயமணி (செட்டிக்குறிச்சி) சிங்கம்புணரி வட்டாட்சியர்சாந்தவட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் புழுதிப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் ஜெயபத்மா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணாக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story