சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்படும்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளது

விவசாயிகளுக்கு திறந்த வெளி கிணறு அமைத்துத்தரப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுஃகுறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 2.5 ஏக்கர் பரப்பளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபர் திறந்தவெளி கிணறுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளது. மாவட்டத்திலுள்ள சிறுஃகுறு விவசாயிகள், தங்களது நில உடமை ஆவணங்கள், கிணறு தோண்டப்படவுள்ள இடத்தின் பரப்பளவு மற்றும் புல எண் விவரங்கள், புவியியல் வல்லுநர் நீருற்று சான்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்ட அடையாள அட்டை மற்றும் சிறுஃகுறு விவசாயிக்கான சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து, அனுமதி பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிவகங்கை-கா. ரெத்தினவேலு-7402608356- 04575-240272

காளையார்கோவில்-மு. சத்தியன் -7402608366- 04575-232225

மானாமதுரை- கு. பர்ணபாஸ் அந்தோனி -7402608370-04574-258016

திருப்புவனம்-கு.ஜோசப் அருள்ராஜ்-7402608371-04574-265224

இளையான்குடி-க. சாந்தி-7402608372-04564-265296

தேவகோட்டை-ரெ. மாலதி-7402608373-04561-272224

கண்ணங்குடி-நா. பழனியம்மாள்--7402608374-04561-274228

சாக்கோட்டை-ஆ. ஹேமலதா--7402608376-04565-282239

கல்லல்-ஆ. அழகுமீனாள்-7402608375-04565-284221

திருப்பத்தூர்-எஸ். ஜஹாங்கீர்-7402608377-04577-266131

சிங்கம்புணரி-செ. பாலசுப்பிரமணியன்-7402608378-04577-242128

எஸ்.புதூர்-க. அங்கயற்கண்ணி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!