சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் தேசியக் கொடி வழங்கும் பணி
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு தேசியகொடி வழங்கும் பணியை ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தொடக்கி வைத்தார்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு தேசியகொடி வழங்கும் பணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், கிழவயல் ஊராட்சிக்கு உட்பட்ட மணியாரம்பட்டியில், மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தேசியகொடி வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:75 ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றிடும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம் கிழவயல் ஊராட்சிக்குட்பட்ட மணியாரம் பட்டியில் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வீடுகள் தோறும் தேசிய கொடியினை வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
நமது முன்னோர்கள் உயிர் தியாகம் செய்து, நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர். கல்வி சுகாதாரம் உட்கட்டமை வசதி ஆகியவைகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றார் போல், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் அடைந்து நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
அதனை கொண்டாடிடும் வகையில், அரசின் அறிவுறுத்தலின்படி நாளைய தினம் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி, தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திட வேண்டும். நமது தேசியக் கொடிக்கு பெருமையை சேர்த்து வந்த கொடிகாத்த குமரன் போன்றோரை மனதில் கொண்டு, தேசியக்கொடிக்கான மரியாதையினை நாம் செலுத்தி, இதனை விழாவாக கொண்டாட வேண்டும்.
இன்றைய தினம் இப்பகுதியில் தேசியக்கொடி வழங்கப்பட்டு வரும் பணியை போன்று, மாவட்ட முழுவதும் உள்ள நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் ஆகியவைகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.எனவே நாளை முதல் மூன்று நாட்கள் நமது வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, அதற்குரிய மரியாதையினை அளித்து, நமது இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டி, இந்திய குடிமகன் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன,; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் க.வானதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, கிழவயல் ஊராட்சி மன்றத்தலைவர் அருண்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் த.சந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu