சிவகங்கை மாவட்டத்தில் முன்மாதிரி கிராமம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில், முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட தேர்வு செய்யப்பட்ட மலம்பட்டி, பிரவலூர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர், மலம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகள், கழிவுநீர் வாய்க்கால்கள், பேயன்கருப்பன் கண்மாயில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள், பிரவலூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வசதிகள், நீர் உறிஞ்சுக்குழிகள், மழைநீர் வடிகால்வாய், சுகாதார வளாகம், தண்ணீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தனிநபர் பண்ணைக்குட்டைகள் போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு கொண்டதாகவும், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தியும், சுத்தம் மற்றும் சுகாதாரத்தினையும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், திரவக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் இல்லாத கிராமம், பொது தூய்மை, அனைத்து அடிப்படை வசதிகளையும் உட்கட்டமைத்த ஊராட்சியினை மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சிகளில் 24 கிராம ஊராட்சிகள் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அடிப்படை கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரவலூர், மலம்பட்டி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடனேரி, பள்ளித்தம்பம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமச்சேரி, கிழமேல்குடி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதங்கநல்லூர், சாத்தனூர், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர், சொட்டதட்டி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
சண்முகநாதபுரம், கிளியூர், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரியங்குடி, தட்டட்டி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தத்தனி, கொடுவூர், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முத்துப்பட்டிணம், வடகுடி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழசிவல்பட்டி, கே.வைரவன்பட்டி, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டநிலை, வையாபுரிபட்டி, எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கரிசல்பட்டி ஆகிய 24 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்காணும் ஊராட்சிகளில் திட மற்றும் திரவக்கழிவுகள் எங்கும் தேங்காதவண்ணம் தூய்மையான கிராமமாக உருவாக்கிட, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்கள் முறையாக மேலாண்மை செய்திட வீட்டுத்தோட்டங்கள் அமைத்தல், தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் ஏற்படுத்துதல், வீடுகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்காலுடன் இணைத்தல், கழிவுநீர் வாய்க்காலிலிருந்து நீர் கால்வாய்களில் கழிவுநீராக கலக்காமல் செங்குத்து உறிஞ்சு குழி அமைத்து வடிகட்டி தெளிந்த நீராக மாற்றி கால்வாய்க்கு கொண்டு செல்லுதல், மழைநீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூய்மைக் காவலர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உயிர் கரிம உரங்களாகவும், மண்புழு உரங்களாகவும் தயாரித்தல், நெகிழிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அரவை இயந்திரங்கள் மூலம் துண்டுகளாக்கப்பட்டு சாலைப்பணிக்கு பயன்படுத்துதல் போன்ற பணிகளை முறையாக செய்து முன்மாதிரி கிராமமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், செயற்பொறியாளர் எஸ்.சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.ரத்தினவேல், எஸ்.அன்புச்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் எம்.எஸ்.வேல்முருகன், எம்.கவிதாமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu