/* */

சிவகங்கை மாவட்ட நீர் நிலைகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

சிவகங்கை மாவட்ட நீர் நிலைகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட நீர் நிலைகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
X

பருவமழையினால் சேதமடைந்துள்ள திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழகத்தில், தற்போது பருவமழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கண்மாய்கள், ஊரணிகள் ஆகியவைகளில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது. மழைகாலங்களில் பெறப்படும் நீரினை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டு, தங்கு தடையின்றி கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகளிலும் மராமத்துப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, பேரிடர் காலங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மீட்புப்பணிகளுக்கான தன்னார்வலர்கள் மற்றும் மணல் மூட்டைகள், ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் மீட்பு உபகரணங்கள் ஆகியவைகளும் அனைத்துப் பகுதிகளிலும் தயார்நிலையில் உள்ளன.

தற்போது, பெறப்பட்டு வரும் மழையினால் திருப்பத்தூர் உட்கோட்டத்தைச் சேர்ந்த செவ்வூர் - கண்டவராயன்பட்டி சாலை கி.மீ. 46-ல் உள்ள சிறு பாலம் சேதமடைந்துள்ளது. மேற்கண்ட இடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்துள்ள சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்வதற்கும், மேற்கண்ட இடத்தில் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.வேலங்குடி ஊராட்சியிலுள்ள கருப்பர் கோவில் பகுதியிலுள்ள ஊரணி மழையின் காரணமாக, தற்போது நிரம்பி, ஊரணியின் சுற்றுச்சுவர் இடிந்து பழுது ஏற்பட்டுள்ளது. அதனையும் தற்காலிமாக, மணல் மூட்டை ஆகியவைகளைக் கொண்டு சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவிப்பொறியாளர்கள் வீரப்பன், இராமசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் (திருப்பத்தூர்) என்.துரைராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.தென்னரசு, விஜயக்குமார், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2022 2:05 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...