சிவகங்கையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

சிவகங்கையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை
X

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கங்கள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சிறப்பு திட்ட செயலாக்கங்கள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கங்கள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், சிறப்பான பணிகளை அனைத்துத்துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டும், அனைத்துப்பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.மேலும், துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்தும், அதில் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அத்திட்டங்களை செயல்படுத்துவதற்கென ஒருங்கிணைக்க வேண்டிய துறைகள் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்கள் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கலாம்.

தாங்கள் துறை ரீதியாக எடுத்துரைக்கும் கருத்துக்களின் அடிப்படையிலும், அறிக்கையின் அடிப்படையிலும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், உரிய பயன்களை உடன் மேற்கொள்ளும் பொருட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வரலாற்று சிறப்புமிக்கசிவகங்கை மாவட்டத்தில் நேற்றையதினம் முதல் பல்வேறு துறைகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறுநலத்திட்டங்கள் ஆகியவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கென அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தினை முன்னேற்றப்பாதையில் வழி நடத்தி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்தொடர்ச்சியாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் ஆகியன குறித்தும்.

சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், விளையாட்டுத்திடல் மற்றும் பேரிடர் மேலாண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும், துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர்

முன்னதாக, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, விளையாட்டு விடுதி மாணவர்களுக்கும், கோட்டையூர் கால்பந்து அணியினருக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியினை தொடங்கி வைத்து, பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியினை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சார்பில் அமைக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி மற்றும் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story