சிவகங்கையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்ட பத்திரிகையாளர்கள்.

சிவகங்கையில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில், காவல்துறையை கண்டித்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியுடன் பத்திரிக்கையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தபோது, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல் காவல்துறை ஆய்வாளர் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசினார். இதனைக் கண்டித்து, இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ராஜா செல்வம், பத்திரிக்கையாளர்களிடம் சமாதானம் பேச வந்த போது, பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாத கேள்விகள் எழுப்பியதால், பத்திரிக்கையாளர்களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதன் பின் சமாதானமடைந்த பத்திரிக்கையாளர்களை, காவலர்கள் மாவட்ட எஸ்.பியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture