கிராமங்களில் இணையதள சேவை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிராமங்களில் இணையதள சேவை:  சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X
தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேசன் மூலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை

தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேசன் மூலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை இணைப்பு பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனரெட்டி ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காளையார்கோவில் வட்டார மைய சேவைக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு வைபர் நெட் கார்ப்பரேசன் இணையதளச் சேவைக்கான கருவிக ளையும் மற்றும் காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுவப்பட்டு வரும் இணையதள சேவைப்பணி, பளுவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், மின் வசதி, கட்டிடப் பராமரிப்பு சுற்றுச்சுவர், சமுதாயக்கூடம், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம் மதுரை தொண்டி சாலை, வாணியங்குடி சாலை ஆகியச்சாலைகள் ரூ.166.77 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும், கௌரிப்பட்டியில் உள்ள முகாம் வாழ் தமிழர்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்களும் அதன் பயன்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கப்பெறும் வகையில், அனைத்துச் சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு, இணையதளச் சேவையின் மூலம் கிடைக்கப் பெறும் வகையில், அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளை ஊராட்சி ஒன்றியங்களுடனும், ஊராட்சி ஒன்றியங்களை மாவட்ட தலைமையகத்துடனும், கண்ணாடி ஒளி இழை வழியாக இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் இணையதளச் சேவைகள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்துச் சேவைகளை வழங்கிடும் பொருட்டு. இணையதளச்சேவைக்கான கருவிகள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் முதற்கட்டமாக, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து காளக்கண்மாய், வேலங்குளம், விட்டனேரி, வெற்றியூர், காளையார்கோவில் ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், இணையதள வேகம் 1 ஜிகா பைட் குறைவில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவை தொடர்பாக காளையார்கோவில் வட்டார மைய சேவைக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள இணையதளச் சேவைக்கான கருவிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை முறையாக மேற்கொண்டு, அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கௌரிப்பட்டியிலுள்ள சென்னலக்குடி முகாம் வாழ் தமிழர்களின் குடியிருப்பில் 106 குடும்பங்களை சேர்ந்த 146 ஆண்களும், 152 பெண்கள் என 298 நபர்கள் வசித்து வருகின்றனர்.இங்கு ,35 தனிநபர் கழிப்பறைகளும், 2 குளியல் அறைகள், 8 குடிநீர் தொட்டிகள் உள்ளன.தற்போது, வசிப்பதற்கு இடவசதி குறைந்த சேதமடைந்த 24 வீடுகள் கண்டறியப்பட்டு புதிதாக வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன.

அனைத்துப் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பளுவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பணிகளையும், நாட்டரசன்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும் விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டிதெரிவித்தார்.

ஆய்வுகளின் போது, காளையார்கோவில் வட்டாட்சியர்கள் உமா மகேஸ்வரி, உமா, ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியன், ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் பஞ்சாமிர்தம், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story