சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா
தமிழக முன்னாள் முதல்வர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்துத்துறைகளின் ஒருங்கிணைப்புடன் "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மாபெரும் புதிய திட்டம், தமிழக முதல்வர், 23.05.2022 அன்று துவக்கி வைக்கப்பட உள்ளது. அனைத்துத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 68 பஞ்சாயத்துக்களில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், வட்டார வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 68 கிராம பஞ்சாயத்துக்கள் விவரம்:சிவகங்கை வட்டாரத்தில் வாணியங்குடி, சக்கந்தி, மாங்குடி, தெங்குவாடி, ஆலங்குளம், காஞ்சிரங்கால், அலவாக்கோட்டை, காளையார்கோவில் வட்டாரத்தில் மேலமருங்கூர், சிலுக்கப்பட்டி, சிரமம், இலந்தைக்கரை, அ.வேலங்குளம், அதப்படக்கி, மல்லல், முத்தூர் வாணியங்குடி, மானாமதுரை வட்டாரத்தில் மாங்குளம், செய்களத்தூர், கல்குறிச்சி, கீழப்பசலை, மேலப்பசலை, முத்தனேந்தல், திருப்புவனம் வட்டாரத்தில் ஏனாதி – தேளி, கழுகர்கடை, பிரமனூர், பூவந்தி, பொட்டபாளையம், கிளாதரி.
இளையான்குடி வட்டாரத்தில் காரைக்குளம், தடியமங்களம், தாயமங்கலம், சாலைக்கிராமம், நகரக்குடி, பெரும்பச்சேரி, தேவகோட்டை வட்டாரத்தில் திருமணவயல், கீழஉச்சாணி, நாகாடி, சிறுவாத்தி, கண்டதேவி, திருவேகம்புத்தூர், வீரை, குருந்தனக்கோட்டை, கண்ணங்குடி வட்டாரத்தில் சிறுவாச்சி, கண்ணங்குடி, பூசலக்குடி, களத்தூர், சாக்கோட்டை வட்டாரத்தில் சங்கராபுரம், ஜெயங்கொண்டான், செங்காந்தக்குடி, சிறுகப்பட்டி, நாட்டுச்சேரி, அமராவதிபுதூர், கல்லல் வட்டாரத்தில் ஏ.சிறுவயல், அ.கருங்குளம், பொய்யாலூர், சிறுவயல், குருந்தம்பட்டு, திருப்பத்தூர் வட்டாரத்தில் திருக்கோஷ்டியூர், இ.அம்மன்பட்டி, பூலாங்குறிச்சி, திருகோலக்குடி, கலையூர், வேலங்குடி, சிங்கம்புணரி வட்டாரத்தில் எஸ்.மாம்பட்டி, பிரான்மலை, எம்.சூரக்குடி, வாகுதெலுவன்பட்டி, எஸ்.புதூர் வட்டாரத்தில் முசுண்டபட்டி, வலசைப்பட்டி, செட்டிக்குறிச்சி மேற்கண்ட கிராம பஞ்சாயத்துக்களில் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் முன்பருவ விழிப்புணர்வு முகாம், மண்மாதிரி எடுத்தல், உழவர் கடன் அட்டை வழங்குதல், கண்மாய் வண்டல் மண், தரிசு நிலம் மேம்பாடு, தொகுப்பு, தென்னை நாற்றுக்கல் விநியோகம், தார்பாய்கள் வழங்குதல், பயிறு வகை விதைகள் விநியோகம், தோட்டக்கலைத்துறையின் மூலம் காய்கறி விதை பொட்டலம் விநியோம், நாற்றுக்கல் விநியோகம், பசுமைக்குடில், சேமிப்பு அமைப்புகல், சேமிப்பு தொழில்நுட்பங்கள், வேளாண் பொறியியல் துறையின் மூலம் பண்ணை இயந்திரங்கள் பதிவு, வாடகை, சூரிய ஒளி மின்மோட்டார் வழங்குதல், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் உளர் களம் அமைத்தல், சேமிப்பு கிடங்கு அமைத்தல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் சிறு-குறு விவசாயி சான்று, பட்டா மாறுதல், வண்டல் மண் தேவைக்கான விண்ணப்பங்களை சரிபார்த்தல்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்தல், இணைப்பு சாலை அமைத்தல், உளர் களம் அமைத்தல், மகளிர் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கான பயனாளிகள் தேர்வு, அங்கக தொகுப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு, உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்தல், பால்வளத்துறை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை சிகிச்சை முகாம், தீவனப்பயிர் விற்பனை மற்றும் விநியோகம், கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர் கடன் வழங்குதல், உழவர் கடன் அட்டை வழங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர் சேர்க்கை, நீர்வள ஆதாரத்துறையின் மூலம் கண்மாய் தூர் வாருதல் மற்றும் பழுது நீக்கம், பட்டுவளர்ச்சித்துறையின் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு சம்மந்தமான சாகுபடி பரப்பு அதிகரித்தல்.
தமிழக முதல்வர், இத்திட்டத்தை 23.05.2022 அன்று காலை 10.00 மணியளவில் துவக்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்வானது, மேற்கூறிய கிராம ஊராட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும், பல்வேறு துறை திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu