சிவகங்கை மாவட்டத்தில், பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்!

சிவகங்கை மாவட்டத்தில், பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்!
X
சிவகங்கை மாவட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்

அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வருவாய்த்துறையின் சார்பில், தேவகோட்டை மற்றும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 1123 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளை வழங்கினார்.

சிவகங்கை:

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் , நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், வருவாய்த்துறையின் சார்பில், தேவகோட்டை மற்றும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தலைமையில் வழங்கி தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தினை இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்திடும் வகையில், அனைத்து துறைகளின் வாயிலாக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்கள். அரசின் நிதி நிலை நெருக்கடியினை சீர் செய்து பொதுமக்களுக்கான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவித்து, அதனையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதில், குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தினையும் தமிழகத்தில் செயல்படுத்தி, பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கும் அடிப்படையாக திகழ்கிறார்கள். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் முதலாம் ஆண்டு பயிலும் 1456 மாணவியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மாணவியர்கள் ஒவ்வொருக்கும் வாழ்த்து மடல் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்கள். அவ்வாழ்த்து மடல் கடிதமும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அரசின் அனைத்து துறைகள் வாயிலாக ஒவ்வொரு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பில், வருவாய் கோட்ட அளவில், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பல்வேறு முகாம்களின் வாயிலாக மனு அளித்த மனுதாரர்களில், தகுதியுடைய பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதில், தேவகோட்டை வருவாய் கோட்ட அளவிலுள்ள திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட 159 பயனாளிகளுக்கும், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 148 பயனாளிகளுக்கும், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட 222 பயனாளிகளுக்கும், தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட 37 பயனாளிகளுக்கும் என, தேவகோட்டை வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 566 பயனாளிகளுக்கும், அதேபோன்று, சிவகங்கை வருவாய் கோட்ட அளவிலுள்ள சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட 271 பயனாளிகளுக்கும், காளையார் கோவில் வட்டத்திற்குட்பட்ட 51 பயனாளிகளுக்கும், இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட 37 பயனாளிகளுக்கும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட 137 பயனாளிகளுக்கும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட 61 பயனாளிகளுக்கும் என, சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 557 பயனாளிகளுக்கும் என , ஆக மொத்தம் வருவாய்த்துறையின் சார்பில் தேவகோட்டை மற்றும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 1123 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகள் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்துவது மட்டுமின்றி, புதிய தொழில் முதலீட்டாளர்களையும் ஈர்க்கின்ற வகையிலும், பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் தற்போது 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் தமிழகத்திற்கு வரப் பெற்றுள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இணையாக தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகள், திட்ட பயன்கள் குறித்து தங்களை சான்றோர்களுக்கும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ. மோகனச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சோ.பால்துரை (தேவகோட்டை), கு.சுகிதா (சிவகங்கை), மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சரவணப்பெருமாள், பேரூாட்சித் தலைவர்கள் சேங்கைமாறன்(திருப்புவனம்), கோகிலாராணி நாராயணன் (திருப்பத்துார்), சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காங்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்துஅனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், பயனாளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....