சிவகங்கையில் சுகாதார பொங்கல்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

சிவகங்கையில் சுகாதார பொங்கல்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

சிவகங்கை மாவட்டத்தில்  நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உடைகுளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர்களின் மரபு பண்பாடு கலாசார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத்திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக தமிழகத்தில் கொண்டாடிடும் பொருட்டு, பல்வேறு நிகழ்வுகளை தமிழகம முழுவதும் நடத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில், இவ்வாண்டும் இந்த பாரம்பரிய விழா ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்விழாவில், மகளிர்கள் கலந்து கொண்ட கோலப் போட்டிகள், இளைஞர்களுக்கான பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உடைகுளம் ஊராட்சியில் இன்றையதினம் நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கலந்து கொண்டு, மேற்கண்டவாறு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கியும், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் சமத்துவ பொங்கல் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் க.வானதி, இணை இயக்குநர் (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) நாராயணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், உதவி திட்டஅலுவலர் (கட்டிடம்) விசாலாட்சி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் எஸ்.புவனேஸ்வரி (வாணியங்குடி),வெள்ளைச்சாமி (உடைகுளம்.) மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business