சிவகங்கை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருது: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருது: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது

மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுசூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

சுற்றுச்சுசூழல் காலநிலை மாற்ற அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த, நிதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். 2021-2022 முதல் ரூ.01.00 கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த அறிவிப்பின்படி, 2022-2023-ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறு சுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள் போன்ற தலைப்புகளில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் நாள் கடைசி நாள் ஆகும். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 8056042460 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself