/* */

சிவகங்கையில் போலீஸ், தீயணைப்பு வீரர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

சிவகங்கையில் போலீஸ், தீயணைப்பு வீரர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கையில் போலீஸ், தீயணைப்பு வீரர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.08.2023 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3359 காலிப்பணியிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 25.08.2023- முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை இவ்வலுவலகத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரக மயில் கேட் அருகிலுள்ள படிப்பு வட்டத்தில் நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு-28 அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புதளர்வுகளும் உண்டு இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாள்18.08.2023 முதல் 17.09.2023 வரை ஆகும்.

எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், மேற்காணும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575- 240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது .

மத்திய மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Aug 2023 2:09 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...