போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்
X
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள போட்டித் தேர்விற்கான அறிவிப்பில், சுமார் 7,500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது

போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.04.2023 முதல் சிவகங்கை படிப்பு வட்டத்தில் தொடங்கப்படவுள்ளது.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியரக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது.

தற்பொழுது, மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள போட்டித் தேர்விற்கான அறிவிப்பில், சுமார் 7,500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:03.05.2023. வயது வரம்பு பதிவிகளுக்கேற்ப 18 முதல் 32 வரை விண்ணப்பம் செய்யலாம்.

சிறப்பு பிரிவினர்களுக்கு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 13.04.2023 முதல் சிவகங்கை படிப்பு வட்டத்தில் தொடங்கப்பட்டு, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேற்காணும், தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலை நாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள https://tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து கொண்டு, இவ்விணையதளத்தில் மத்திய,மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா, விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story