சிவகங்கை மாவட்டத்தில் கேமராவுடன் கூடிய பறக்கும் படை வண்டிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கேமராவுடன்   கூடிய பறக்கும் படை வண்டிகள்
X
Flying Squad Vehicle With Camera சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வாகனங்களில் கேமரா பொருத்தும் பணி நடந்தது.

Flying Squad Vehicle With Camera

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தனது அறிவிப்பின் போது தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதேபோல் தலைவர்களின் சிலைகள், கட்சி சின்னங்கள், உள்ளிட்டவைகளுக்கு உரிய நடவடிக்கைகளும் ஆங்காங்கே எடுக்கப்பட்டு வருகிறது. பல கட்டுப்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடியும் வரை தேர்தல் கமிஷன் உத்தரவின் படியே அனைத்தும் நடக்கும் என்பதால் இந்த விதிமுறை உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டு விட்டது.

Flying Squad Vehicle With Camera



சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, பறக்கும் படை, நிலையான கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை தீவிரப்படுத்தப்படுமென சொல்லப்படும் நிலையில், முதல் கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழுஎன தேர்தல் பணிக்காக 24 நான்கு சக்கர வாகனங்களில் அதிகாரிகள் பணி செய்ய உள்ளனர் அவர்கள் பணி செய்யும் வாகனத்தில் 5 ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய360 டிகிரி கேமரா பொருத்தும் பணிதீவிர படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம்வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது .

Tags

Next Story