சிவகங்கை மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
பைல் படம்
மீன் வளர்ப்போர் மற்றும் மீனவர்கள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக சேர்வதற்கு தங்களது பண்ணைக் குட்டைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டி லுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் தற்போது கையிருப்பில் 7 இலட்சம் ரோகு விரலிகள், 0.80 இலட்சம் கட்லா விரலிகள் மற்றும் 0.40 இலட்சம் மிர்கால் விரலிகள் உள்ளன. சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பயனாளிகளுக்கு ரோகு மற்றும் மிர்கால் 1,000 , மீன் விரலிகள் ரூ.400க்கும், கட்லா 1,000 மீன் விரலிகள் ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் அரசு சார்ந்த அமைப்பு களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மேற்படி தொகையில் 20% கூடுதலாகவும் தனியார் மற்றும் கண்மாய் குத்தகைதாரர்களுக்கு மேற்படி தொகையில் 50% கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆகையால், மீன்வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணைக் குட்டைகளை பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்.
மேலும், மீன் விரலிகளை வாங்கி பயன்பெற விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணை, கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர், சிவகங்கை – 630561 என்ற முகவரிக்கோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu