சிவகங்கை மாவட்டத்தில், சிறப்பு தொழில் முகாம்: மாவட்ட ஆட்சியர்..!

சிவகங்கை மாவட்டத்தில், சிறப்பு தொழில் முகாம்: மாவட்ட ஆட்சியர்..!
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு தொழில் முகாம் நடக்கவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர, தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்டு, தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கங்கள், தொழில் திட்ட ஆலோசனைகள் (Project Guidance) மற்றும் ESG (சுற்றுப்புற சூழல் மேலாண்மை) தொடர்பான சந்தேங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை பெற உதவுதல் போன்ற தொழில்முறை சிரமங்களை கலைவதற்கும், வருங்கால தொழில் நிலைத்தலுக்கும் உறுதுணையாக உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான, சிறப்பு தொழில் கடன் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது.இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), UYEGP மற்றும் AABCS (SC/ST) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

மேலும், தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25%/35% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும். பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். எனவே, தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுதல், விபரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் எண்:45, எஸ்.பி.கே. காம்ப்ளக்ஸ் இரண்டாம் தளம், ஸ்ரீ சண்முகராஜா ரோடு, அம்பேத்கார் சிலை அருகில், காரைக்குடி – 630 001 என்ற முகவரியிலோ அல்லது 94450 23464, 94450 23480 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது 04565 232210 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!