பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி : ஆட்சியர் தகவல்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வெளியிட்ட தகவல்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல், இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
பொதுகால கடன் திட்டம் ஃ தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 8சதவிகிதம் வரை பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
ஆண்டு வட்டி விகிதம் 5 சதவிகிதம், சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1.00 இலட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5சதவிகிதம் ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு பயனாளிக்கு ரூ.30,000வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,00- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக்கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில், ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu