சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

பேரூராட்சித் துறைகளின் சார்பில், பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.13.77 கோடி மதிப்பிலான பணிகள் ஆய்வு செய்யப்பட்டன

சிவகங்கை மாவட்டத்தில், பேரூராட்சித் துறைகளின் சார்பில், பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.13.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கை களை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், இன்றையதினம், மாவட்ட ஆட்சித்தலைவர் , திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

அதில், திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர் - காரைக்குடி ரோடு வார்டு-10-ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ்; ரூ.195 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு-2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ்; மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி.

2021-2022-ம் ஆண்டின் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.114 இலட்சம் மதிப்பீட்டில் அச்சுக்கட்டு அய்யனார்கோவில் வீதி மற்றும் மருத்துவர் நகரில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.13.10 இலட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் மேம்பாட்டு பணி ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, வார்டு-12 கீழரதவீதியில் இரண்டாம் நிலை மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதையும், அட்டக்குளம் வார்டு-16-ல் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் இயங்காமல் இருப்பதையும் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

மேலும், நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:1-ல் பெரிய நந்தவனம் ஊரணி மேம்பாட்டுப் பணி, ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:5-ல் மாணிக்க நாச்சி ஊரணி மேம்பாட்டுப் பணி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊரணி மற்றும் வரத்துக்கால் தூர் வாரும் பணி ஆகியப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்டப் பகுதிகளில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.190.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:7-ல் செட்டிய ஊரணி மேம்பாட்டுப் பணி, வார்டு எண்:13-ல் ரூ.159.00 இலட்சம் மதிப்பீட்டில் கோவில் ஊரணி மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு, மூலதன நிதித் திட்டத்தின் கீழ், வார்டு எண்:3 வேங்கைப்பட்டி சாலையில் ரூ.150.00 இலட்சம் மதிப்பீட்டில் மின்மயான வளாகத்தில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிகள் மற்றும் ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் ,மேலூர் சாலையில் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும்,

மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.146.00 இலட்சம் மதிப்பீட்டில் சேவுகமூர்த்தி கோவில் சாலை, தேத்தாங்காடு, அண்ணாநகர் மற்றும் கீழக்காட்டு சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, அதனைத்தொடர்ந்து, தூய்மைப் பாரத திட்டத்தின் கீழ், ரூ.25.00 மதிப்பீட்டில் வார்டு எண்:2 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பொது கழிப்பிடம் கட்டும் பணியும் என மொத்தம் ரூ.13.77 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சித்துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கண்ட ஆய்வுகளின் போது, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை தரமான முறையில், விரைந்து முடிக்கப்பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), எ.புசலான் (நெற்குப்பை), என்.அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!