திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தினர்.

இந்த போராட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை/யெனில் தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்

திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் , திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம், மாநில மையம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்றிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலருக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், தூய்மை காவலர் பணிக்கு குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை எனில் தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதில், ஊராட்சி செயலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags

Next Story