/* */

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு
X

சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சோழபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற 32-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறி-யதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திடவும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும் சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தமிழகம் முழுவதம் (24 50,000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் 2,328 இடங்களில் 760 தடுப்பூசி பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேலும், இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய நபர்கள் உள்ள கிராமங்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16.01.2021 முதல் 21.07.2022 வரை மொத்தம் 22,12,612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசிகள் 11,28,596 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 60,403 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 39,590 நபர்களுக்கு கோர்பிவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 10,56,023 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில்,15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 49,956 நபர்களுக்கும் தடுப்பூசிகளும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 28,907 நபர்கக்கு கோர்பிவேக்ஸ் இரண்டாம் தவணைதடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி 10.01.2022 முதல் 27,993 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்திட பொது இடங்களில் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும்.மேலும் ,பொதுமக்களின் சுகாதார நலன் கருதி அரசின் சார்பில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.இம்முகாமில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ச.ராம்கணேஷ், ஊராட்சி மன்றத்தலைவர் திரு.சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...