நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற  கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற, 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் அப்பகுதியிலுள்ள நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 12.09.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12-09-2021 முதல் 02-04-2022 வரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 7,27,980 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 16.01.2021 முதல் 07.04.2022 வரை மொத்தம் 19,60,765 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசிகள் 10,82,074 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதில்; 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 54,090 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில்; 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 38,565 நபர்களுக்கு கோர்பிவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 8,69,901 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 28,838 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.01.2022 முதல் 8,790 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக சனிக்கிழமை 09-042022 அன்று மாவட்ட அளவிலான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 65 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 535 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில், பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷ-ல்டு 55,௦௦௦ கோவாக்சின் தடுப்பூசி 4,700 மருந்துகளும் மொத்தம் 59,700 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை அவசியம் செலுத்திக் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப்பகுதியிலுள்ள நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அச்சமயம் நூலகத்தினுள் இருந்த புத்தக வாசகர்கள் மற்றும் தேர்வுக்கு தயராகும் தேர்வாளர்களிடம் தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் உள்ளனவா என்பது குறித்தும், இந்நூலகத்தில் மேம்படுத்த வேண்டிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். புத்தக வாசிப்பாளர்கள் இன்னும் பலவகையான கூடுதல் புத்தகங்களை நிறுவிடவும், கூடுதல் இடவசதியினை ஏற்படுத்தித்தரவும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம், கோரிக்கை விடுத்தனர். பல்வேறு வகையான புத்தகங்களை கூடுதலாக நிறுவுவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இடவசதியினை அதிகப்படுத்திட பரிசீலனை மேற்கொண்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.ராம்கணேஷ், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் ஜெ.பிரியதர்சனி ஜெபராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னமருது, மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!