சிங்கம்புணரியில் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அலுவலகக் கட்டுமானப்பணி: அமைச்சர் தொடக்கம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையை தொடக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பணியை தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அரசின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்து அனைத்துத் துறைகளின் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது மட்டுமன்றி அனைத்துத்துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.
எனது அரசு என்று கூறாமல்நமது அரசு என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எடுத்துரைத்துஇ தனது அயராது உழைப்பின் மூலம் தமிழகத்தை முன்னோடி மாநிலமாகவும் முதன்மை மாநிலமாகவும் திகழும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமப்புற பகுதியில் சாலை மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கெனவும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புக்கள் சார்ந்த கட்டிடங்களை சீரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில், நவீன வசதிகளுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடம் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் கட்;டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோன்று தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு அதற்கென ரூ.280 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்த ஊராட்சி செயலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இணையதள சேவை ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான அறை கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஆகியவை ஏற்படுத்திடவும் திட்டமிடப்பட்டு பொதுமக்களுக்கு தேவையானவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு வருவாய்த்துறையைச் சார்ந்த அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதவிர ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுபோன்று பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்துத் தேவைகளையும் எளிதில் பெறுகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனறையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தரமான முறையில் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பி.திவ்யாபிரபு,ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.சரண்யா. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அ.மதிவாணன் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் லெட்சுமணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu