சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் திட்டங்களின் செயல்பாடு பற்றி ஆட்சியர் ஆய்வு
உரம் இருப்பு பற்றி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆய்வு நடத்தினார்.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், நேரில் பார்வையிட்டு களஆய்வுகள் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் மானாமதுரை வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், நேரில் பார்வையிட்டு களஆய்வுகள் மேற்கொண்டு கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி அவர்களை பயன்பெற செய்து வருகிறார். அந்தவகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்கள் நிலத்தின் தன்மைகேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி பழவிதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறைரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மற்றும் மானாமதுரை வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில், சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட சிவகங்கை மத்திய விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளபட்டு, விதைகள் ரகங்கள் இருப்பு நிலை மற்றும் பருவ காலத்திற்கு ஏற்றவாறு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவது உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022-ன் கீழ் மாங்குடி கிராமத்தில், தரிசு நிலத்தொகுப்பின் கீழ் பயன்பெற்று வரும் விவசாயியை நேரில் சந்தித்து அதன் பயன்கள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், வடக்கு சந்தனூரில் மானியத்துடன் கூடிய நுண்ணீர் பாசன முறையில் ரூ.179000 மதிப்பீட்டில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயியை நேரில் சந்தித்து, அவர் மேற்கொண்டு வரும் விவசாய முறைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது. இந்நிகழ்வின் போது, வடக்கு சந்தனூரில் தேசிய எண்ணெய் வித்துப்பயிர் இயக்கம் 2022-2023 திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயி சான்றின் அடிப்படையில் தனசேகரன் என்ற விவசாயிக்கு ரூ.௧௪௦௫௦௭ மதிப்பீட்டில் ,மானியத் தொகையுடன் கூடிய ரோட்டோவெட்டர் இயந்திரம் வழங்கப்பட்டு, மேற்கண்ட விவசாயியின் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மானாமதுரையில் உள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதில், அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்) பாஸ்போபாக்டீரியா, பொட்டாஸ் மொபிலைசிங் பாக்டீரியா, ரைசோபியம் (பயறு) மற்றும் ரைசோபியம் (நிலக்கடலை) போன்ற உயிர் உரங்கள் உற்பத்தி குறித்தும், அதன் விற்பனை விலை மற்றும் அதன் பயன்பாடு ஆகியனக் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் போது, திரவ உயிர் உற்பத்தி மையத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் சூரக்குடியைச் சேர்ந்த நித்யா என்ற விவசாயிக்கு, விசை உழுவான் இயந்திரம் ரூ.213000 மதிப்பீட்டில் மானியத்; தொகையுடன் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் சார்பில்,
மாங்குடி கிராமத்தில் ஒரு விவசாயி அமைத்துள்ள நிரந்தர பந்தல் குறித்தும், அதனுள் புடலங்காய் போன்ற தோட்டக்கலை பயிர்கள் பயிரிட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேலும், அவர் நுண்ணீர் பாசன முறையில் பயிரிட்டுள்ள வாழைப் பயிர்கள் முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தெற்கு சந்தனூரில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.52000மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை தொடர்பாகவும் ,ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தெற்கு சந்தனூரில் விவசாயியால் பயிரிடப்பட்டுள்ள டிராகன் பழங்கள் சாகுபடி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு, உற்பத்திக்கான நோக்கம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், மாங்குடி தரிசு நிலத் தொகுப்பில் ஒரு விவசாயிக்கு சூரிய சக்தியினால் இயங்கும் 5 சூரியஒளி மோட்டார் ரூ.272000மதிப்பீட்டில் மானியத் தொகையுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டு, அதன்மூலம் தற்போது சிறந்த முறையில் விவசாயம் மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார். மேற்கண்ட விவசாயியை நேரில் சந்தித்து பயன்கள் குறித்து கேட்டறியப்பட்டு மேலும், தங்களது விவசாயத்தினை விரிவாக்கம் செய்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் இரா.தனபாலன் வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பழ.கதிரேசன் தோட்டக்கலை துணை இயக்குநர் பு.அழகுமலை, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu