சிவகங்கை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி தொகை வழங்கிய ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரியம் சார்பில் உதவி தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில், 09 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 93,500/- மதிப்பீட்டில்பல்வேறு வகையான உதவித் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு மற்றும்நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் முன்னிலையில் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல்வேறு வகையான உதவித் தொகைக்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் , முன்னிலையில் வழங்கி தெரிவிக்கையில் கூறியதாவது:-
சமூக பொறுப்புடனும், இன்றைய தலைமுறையினர்களுக்கு வரலாற்று சிறப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகளை கலைநயத்துடன் மக்களுக்கு எடுத்துரைக்கின்ற சிறப்பான பணியினை நாடகக் கலைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படிப்பட்ட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி,அவர்களின் நலன் காத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு உரிய நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில்பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு உட்பட்ட சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறகலைஞர்களால் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் / தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் , பரிந்துரையின்படி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கலைமாமணி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம், முன்னிலையில் சிவகங்கை மாவட்டத்திற் குட்பட்ட 09 நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகைகள் ரூ.93,500/- மதிப்பீட்டில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதில், 03 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.5,000/- மதிப்பீட்டில் திருமண நிதி உதவித் தொகையும், 02 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.1,000/- மதிப்பீட்டிலும், 01 நாட்டுப்புறக் கலைஞருக்கு ரூ.1,500/- மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகையும் மற்றும் 03 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.25,000/- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கையின் அடிப்படையில், நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைப்பின் அதனை நலவாரியம் மூலமாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu