சிறந்த எழுத்தாளருக்கான பரிசு வென்ற சிவகங்கை எழுத்தாளருக்கு ஆட்சியர் பாராட்டு

சிறந்த எழுத்தாளருக்கான பரிசு வென்ற  சிவகங்கை எழுத்தாளருக்கு ஆட்சியர் பாராட்டு
X

சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்

சிறந்த எழுத்தாளருக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் விடுதிக்காப்பாளர் செந்தில்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்

தமிழ்நாடு முதலமைச்சரிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான படைப்புக்களை உருவாக்கிடும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் அவர்களது படைப்புக்களை நூலாக வெளியிடும் வகையில், ரூ.50,000 நிதியுதவி தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழக அரசால் 2021-2022-ஆம் ஆண்டிற்கு சிறப்பு படைப்புகளை தெரிவு செய்திட அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 படைப்புக்களை நூலாக வெளியிடுவதற்கு ஒவ்வொரு படைப்பிற்கும் செலவினத் தொகையாக ரூ.50,000அல்லது செலவினத் தொகை இவற்றில் எது குறைவான தொகையோ அதை நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதமைச்சர் , 13.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் காப்பாளர் த.செந்தில்குமார், ரூ.25,000நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அவருக்கு ,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் உட்பட விடுதிக்காப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!