உலக காச நோய் நாள் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசளிப்பு
உலக காசநோய் நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவருக்கு பரிசளித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதனரெட்டி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உலக காசநோய் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழக அரசு பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் நலன் காத்து வருகிறது. அதனடிப்படையில், காசநோய் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, உலக காசநோய் தினமாக மார்ச் 24 இன்று கடைபிடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர்.
தற்போதுள்ள, நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளித்திடும் பொருட்டு, தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சரிவர மருந்தினை உட்கொள்ளாமல் இருப்பதால்தான் விளைவுகள் ஏற்படுகிறது.
மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனைகளை அணுகி முறையாக பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாத்திட முடியும்.வருகின்ற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் இது குறித்து, போதிய விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் ,
அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்திடும் வகையில், அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் சளிப்பரிசோதனைக்கென 19,136 பரிசோதனைகளும், 2022-ஆம் ஆண்டில் 37,222 சளிப்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட 1,425 காசநோயாளிகளில் 1,318 நோயாளிகளும், மற்றும் 2022-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 1,174 காநோயாளிகளில் 1,115 நோயாளிகளும் முழுiமாக சிகிச்சை பெற்று குணமடைந்துள் ளனர்.காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் ஒன்றும் நமது மாவட்டத்திற்கு கடந்த ஜூலை’2022-ஆம் ஆண்டில் ,
தமிழ்நாடு முதலமைச்சர்,வழங்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பாட்டில் உள்ளது. அவ்வாகனத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 3,914 நபலர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாக 5 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு “நிக்ஷை போஷன் யோஜனா” திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிற காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.500வீதம் சிகிச்சை பெறும் காலத்தில் 1,303 நோயாளிகளுக்கு ரூ.29,16,000அவர்களின் ,வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி காசநோயாளிகளில் மிகுந்த பாதிப்புக்குள்ளான நோயாளிகளை தத்தெடுத்து அவர்களின் சிகிச்சைக் காலம் முழுவதும் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கிடும் வகையில் “நிக்ஷை மித்ரா” எனும் கொடையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் மூலம் காசநோயாளிகளுக்கு சிகிச்சை காலம் முழுவதும் சத்துள்ள உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயினை முற்றிலுமாக ஒழித்திடும் பொருட்டு, அனைத்துத் துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, காசநோய் ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, சுலோகன் ஆகியப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சி.ரேவதி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எ.கமலவாசன், துணை இயக்குநர்கள் மரு.வி.ராஜசேகரன் (காசநோய்), மரு.கே.யோகவதி (குடும்ப நலம்), மரு.விஜய்சந்திரன் (சுகாதாரப்பணிகள்), மரு.எஸ்.கவிதாராணி (தொழுநோய்), நலக்கல்வியாளர் கே.வெள்ளைச்சாமி மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu