/* */

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
X

சிவகங்கை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

01.01.2024- ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இன்றைய தினம் (27.10.2023) வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, 01.01.2024- ஐதகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் எனவும் அறிவித்து உள்ளார்.

அதன்படி, 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி, சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை , தேவகோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Oct 2023 12:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க