மானியத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து வங்கியாளர்கள் கூட்டம்
மானியத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுக்கான விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
மானியத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ,தனிநபர் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலினை மேம்படுத்திட மானியத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து வங்கியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுக்கான விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழக அரசு உலக வங்கி நிதியுதவிடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக தொழில்களை மேம்படுத்துதல் வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டம் ,சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களைச் சார்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் திட்டத்தின் மதிப்பீட்டில் 30 சதவிகிதம் மானியமாக வழங்குவதற்காக இணை மானியத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நபார்டு வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய மாநில அரசுகளில் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறை தொழிற்துறை மற்றும் இதர முன்னுரிமை துறை ஆகியவைகளுக்கு கடன் வழங்கிட வகுக்கப்பட்டுள்ள இலக்குகளின்படி வங்கியாளர்கள் தகுதியான நபர்களுக்கு வங்கிக்கடன் கிடைத்திட முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கி.வானதி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட மற்றும் வட்டார மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu