சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவிக்க விருதுகள்

சிவகங்கை மாவட்டத்தில்  மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவிக்க விருதுகள்
X

பைல் படம்

முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளைவழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் , 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய நெகிழி பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்ற சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கௌரவிக்க முன் வந்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளது. இவ்விண்ணப்பப் படிவத்தில் தனிநபர் ,நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்ப மிட்ட பிரதிகள் இரண்டு நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (இரண்டு எண்ணிக்கைகள்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.05.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.

மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாக பணிகளைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே மீண்டும் மஞ்சப்பை பரப்புரையின் நோக்கம்.


Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil