இளைஞர்களுக்கான கலை போட்டிகள்: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
பைல் படம்
இளைஞர்களுக்கான கலைப்போட்டிகளில் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஃ மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தி அரசு ஆணையிடப்பட்டுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் 09.06.2022 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 போட்டிகள் காலை 09.00 மணி முதல் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனி நபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்தி அனுமதிக்கப்படுவார்கள். குரலிசை போட்டியிலும் நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின் கிதார், சாக்சபோன், கிளாரினெட், தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங்;, கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில பங்கேற்கலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பராம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஒவியப்போட்டியில் பங்கேற்பவர்களுடைய ஓவியத்தாள்கள் வழங்கப்படும்.
அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம்; மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.மாவட்ட போட்டியில், முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் வாயிலாக பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் 0452-2566420, 9842596563 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu