கஞ்சா போதையில் வாளுடன் சென்று அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் கைது.

கஞ்சா போதையில் வாளுடன் சென்று அச்சத்தை ஏற்படுத்திய  இளைஞர்கள் கைது.
X

 திருப்பத்தூரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதுடன், வாளுடன் சாலையில் சென்று பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

சாலையில் சென்றவர்களை கையிலிருந்த வாளைக்காட்டி மிரட்டினர்.அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதுடன், வாளுடன் சாலையில் சென்று பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தங்கமணி தியேட்டர் அருகில் சாலையில் கஞ்சா போதையில்வாளுடன் முகமது ரியாஸ் (22), காஜாமைதீன் (20) என்ற சகோதரர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தியுள்ளார். சாலையில் சென்றவர்களை கையிலிருந்த வாளை காட்டி மிரட்டி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் சார்பு ஆய்வாளர் ஜானகிராமன், சிவாஜி, காவலர்கள் அய்யானார், குணசேகரன், போன்றோர் ஓடிச்சென்று முகமது ரியாஸை விரட்டி போராடி பிடித்து ஆட்டோவில் ஏற்றி திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முகமது ரியாஸை பிடிக்கும் போது பீட்டர் என்ற காவலருக்கு கையில் லேசான கீரல் ஏற்பட்டது. அய்யனார் என்ற காவலரின் செல்போனும் உடைந்தது.

Tags

Next Story
why is ai important to the future