சிவகங்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா
X

காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை மாவட்ட காசநோய் பிரிவு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது

Appreciation function for NGOs in Sivagangai

காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை மாவட்ட காசநோய் பிரிவு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காசநோய்ப் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான காசநோய் கணக்கெடுக்கும் பணியினை நடத்தி, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவ அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனைப் பாராட்டும் வகையில், நேற்றையதினம் சென்னையில், நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரால், சிவகங்கை மாவட்ட காசநோய் பிரிவிற்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், காசநோயாளிகளுக்கு அரசு வழங்கி வரும் ஊட்டச்சத்து உதவியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் ஊட்டச்சத்து உதவி வழங்கி வருகின்றன. இவர்களையும் கௌரவிக்கும் பொருட்டு, சிவகங்கையைச் சேர்ந்த சேவா சமாஜம் தலைவர் பகீரத நாச்சியப்பன் , ஜீவானந்தம் (ஐஆர்சிடிஎஸ்) மற்றும் மைக்கேல் தேவசகாயம் அன்னராஜ் (ட்ரூபா) ஆகியேர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டியிடம், காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வில் துணை இயக்குநர் (காசநோய்) வே.ராஜசேகரன் உடனிருந்தார்.

Tags

Next Story