சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
X
சுற்றுச்சூழல் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பு

சுற்றுச்சூழல் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியப்பிரிவுகளில் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தனிநபர்கள், தன்னார்வ நிறுவனங்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் சுற்றுச்சுசூழல் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

இது தொடர்பாக, 2021-ஆம் ஆண்டிற்கான 'தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள்" பெற சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான தன்னார்வ நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இருப்பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்ற முகவரிக்கு வருகின்ற 23.05.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

மேலும் ,இதற்கான விண்ணப்பத்தினை, இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!