சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டிடத்துக்கான இடம் : ஆட்சியர் ஆய்வு.
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில்மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்,மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்தல் பணி போன்றவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டிநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-2022-ன் கீழ் காளன் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கென ரூ.1.00 மதிப்பீட்டில் மானியத்தொகை பெற்று, சிப்பி காளான் பண்ணை வைத்துள்ள பயனாளியை நேரில் சந்தித்து, திட்டச் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்துவதற்கென துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்பு கொண்டு பயன்பெறும்படி பயனாளியிடம் தெரிவித்தார்.
மேலும், காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதனை தரமான முறையில் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சிவகங்கையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, பிரசவத்திற்கென சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண்கள் வருகை புரிந்து, அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்மூலம் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 பிரசவங்கள் நடைபெற்று, தாய் சேய் நலன் காக்கப்பட்டு வருகிறது.
தற்போது செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையக் கட்டிடத்தைத் தொடர்ந்து, அதனை விரிவுப்படுத்திடும் நோக்கில், அவ்வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாய் சேய் நலன் கட்டிடம் கட்டுவதற்கென இடம் தேர்வு செய்தல் பணி தொடர்பாகவும் மற்றும் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சை மைய கட்டிடத்திற்கான இடங்கள் தேர்வு செய்தல் பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, இன்றையதினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், துணை இயக்குநர்கள் மரு.விஜய்சந்திரன் (பொது சுகாதாரம்), அழகுமலை (தோட்டக்கலைத்துறை), சிவகங்கை நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu