கண்மாய் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் தகவல்

கண்மாய் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் தகவல்
X

 மானாமதுரை வட்டம், எம்.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை கண்மாயில்  உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

ஆக்கிரமிப்புகளை நில அளவை செய்து சட்டவிதிகளின்படி தகவல்கள் தெரிவித்தபின் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது

கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, மானாமதுரை வட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து, நில அளவை செய்து, சட்டமுறைப்படி தகவல்கள் தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மானாமதுரை வட்டம், எம்.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் பல்வேறு ஆக்கிரப்புகள் உள்ளதை கண்டறியப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு சட்டமுறைப்படி பல்வேறு முறை நோட்டிஸ்கள் அனுப்பப்பட்டும், அவர்கள் யாரும் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புக்களை அகற்றிக் கொள்ளவில்லை.

இதனால், அன்று வட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்; ஆகியோர் தலைமையில், அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின் போது, எம்.கரிசல்குளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டிப்பட்டிருந்த 2 வீடுகள், 1 கழிவறை, 1 ஆட்டுக்கொட்டம் மற்றும் 3 ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 7 ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இப்பணியில், மண்டலத்துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்தனர். மானாமதுரை காவல் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, தெரிவித்தார்.

Tags

Next Story
the future of ai in healthcare