வரும் 21ல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், சிறப்பு முகாம்

வரும் 21ல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், சிறப்பு முகாம்
X

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்காக, வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வரும் 21ம் தேதியன்று வட்ட வழங்கல் அலுவலகங்களில், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக, சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், வருகிற 21 ம் தேதி அன்று, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை (21ம் தேதி) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மனு செய்து பயன்பெறலாம் என, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!