கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஆயுதம் தடுப்பூசி- அமைச்சர் தகவல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பிரபாகரன் காலனியில் வசிக்கும் மக்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இந்த பகுதி மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக நிவாரண பெருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வீதம் ,357 குடும்பங்களுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில்அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது இந்த கொரோனா காலத்தில் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் உங்களுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கையாகும்.ஏனெனில் இது ஒரு தொற்று நோயாகும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இந்த தொற்று பரவுகிறது. இன்று மக்கள் நடமாட்டம் குறைவு என்பதால் அதன் மூலம்தான் இந்த நோய் இன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு நாம் வெளியில் வராமல் உள்ளே இருந்து இன்று அரசு வகுத்து தந்த விதிமுறைகளை கடைப்பிடித்து வாழவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இரண்டு உள்ளன.ஒன்று ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பது இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசிடம் தமிழக முதல்வர் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இது கூடிய விரைவில் நிறைவேற்றப்பட்டு அதிகளவில் தடுப்பூசி தமிழகத்திற்கு வரும் எனவே மக்கள் அச்சப்படாமல் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் காரைக்குடி மனமகிழ் மன்றத்தினர் முதல்அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக ரு2லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்..
இந்நிகழ்ச்சியில் கேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்தர், வட்டாட்சியர் ஜெயந்தி|முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் திருப்பத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சண்முக வடிவேலு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu