சிவகங்கை மாவட்டத்தில் இம் மாதம் 27 ல் கால்நடை சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு வேதியரேந்தல் கிராமத்தில், வருகின்ற 27.06.2023 அன்று கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்; நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வேதியரேந்தல் கிராமத்தில் விவசாய மக்கள் பயன்பெறும் வகையில், பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாம் வருகின்ற 27.06.2023 அன்று நடைபெறவுள்ளது.
இம்முகாமில், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தி, சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், தாது உப்புக்கலவைகள், தீவன மரக்கன்றுகள் மற்றும் தீவன விதைகள் ஆகியவை கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மானாமதுரை வட்டம், வேதியரேந்தல் கிராமத்தில் நடைபெறும் முகாமிற்கு அழைத்துச் சென்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்; ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu