உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு சிறப்பு முகாம்: ஆட்சியர்

உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு  சிறப்பு முகாம்: ஆட்சியர்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பதிவு முகாமுக்கு வராமல் விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படு கிறது

சிவகங்கை: மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் முகாமிற்கு வராமல், விடுபட்டுள்ளவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரண்டு நாட்களும் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில், ஊராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட 695 முகாம்களில் ,கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறும் பொருட்டு முதற்கட்ட முகாம்கள் கடந்த 24.07.2023 முதல் தொடங்கப்பட்டு, வருகின்ற 04.08.2023 வரை (12 நாட்கள்) நடைபெறவுள்ளன. இம்முகாமிற்கு , வருகை தந்து விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், முகாமிற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் முகாமிற்கு வராமல் விடுபட்டுள்ளவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக இந்த நிலையில், விடுபட்டவர்களுக்காக மீண்டும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். அதாவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில், 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரண்டு நாட்களும் முகாம்கள்நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ,டோக்கனில் குறிப்பிட்ட நாளில், முகாமிற்கு வர இயலாதவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்