/* */

சிவகங்கை மாவட்டத்தில், குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில், குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர். 

சிவகங்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில்சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி,பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், திருப்புவனம் பேரூராட்சி ஆகிய கிராமப்புறப்பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் அவர் கூறும்போது,

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளின் ஒன்றான பாதுகாக்கப்பட்ட குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு,குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் பொருட்டு, தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் வகையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 08 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 03 நகராட்சிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்த மொத்தம் ரூ.1752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிதி ஆதாரம் தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் உதவி கீழ் ரூ.1537.59 கோடி மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.215.14 கோடி ஆகும். குளித்தலை அருகில் காவேரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு இம்மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.


இத்திட்டம் முடிவுறும் தருவாயில், தற்கால (2021) மக்கள் தொகையின்படி 11.39 இலட்சம் மக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் அளவிலும், இடைக்கால (2036) மக்கள் தொகையின்படி 13.56 இலட்சம் மக்களுக்கு 69.50 மில்லியன் லிட்டர் அளவிலும் மற்றும் உச்சகால (2051) மக்கள் தொகையின்படி 16.11 இலட்சம் மக்களுக்கு 86.42 மில்லியன் லிட்டர் அளவிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு மாவட்ட முழுவதும் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக, மானாமதுரை நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் 13.60 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், 3.10 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேற்கண்ட நகராட்சிக்கான மேல்நிலைத் தொட்டியையும் மற்றும் கேப்பார்பட்டிணம் பகுதிக்கான 1.70 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தினையும், அதனைத்தொடர்ந்து , மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில், தற்போது கட்டப்பட்டு வரும் 2.65 இலட்சம் லிட்டர்கள் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாடனேந்தல் ஊராட்சியில் , கட்டப்பட்டு வரும் 0.95 இலட்சம் லிட்டர்கள் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் திருப்புவனம் பேரூராட்சி பகுதியின் காந்தி வீதியில் கட்டப்பட்டு வரும் 02.00 இலட்சம் லிட்டர்கள் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, புதூர் இரயில்வே காலனியில் கட்டப்பட்டு வரும் 0.70 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவைகளின் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சிவகங்கை மேற்பார்வைப் பொறியாளர் அயினான் சிவகங்கை திட்டக்கோட்ட நிர்வாகப் பொறியாளர் ஆறுமுகம் , மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன் திட்ட மேலாளர் (எல்.டி.கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் சென்னை) பிரதீப் மற்றும் உதவி இளநிலைப் பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2023 8:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்