சிவகங்கையில், குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் தொடக்கம்

சிவகங்கையில், குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் தொடக்கம்
X

உலக இரத்தக் கொடையாளர் தினத்தினை முன்னிட்டு,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், இரத்த தானம் முகாமினை தொடக்கி வைத்தார்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 -ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக இரத்தக் கொடையாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

உலக இரத்தக் கொடையாளர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், இரத்த தான முகாமினை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.06.2023) நடைபெற்ற உலக இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா , உலக இரத்ததான முகாமினை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

ஓவ்வொரு வருடமும் ஜூன் 14 -ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக இரத்தக் கொடையாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக இரத்த தானம் கருப்பொருளாக தொடர்ந்து பிளாஸ்மா குருதி கொடுப்போம், வாழ்வைப் பகிர்வோம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற உலக இரத்ததான முகாமில், அரசுப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இரத்ததானம் வழங்கியதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ,தலைமையில், உலக இரத்தக் கொடையாளர் தின உறுதிமொழி, அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு முதல்நிலை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுடன் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சத்தியபாமா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) சி.ரத்தினவேல், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.கமலவாசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
உடல்நலக் குறிப்பு இன்று!