சிவகங்கையில் பொங்கல் பரிசு வழங்கும் பணி: ஆட்சியர் தொடக்கம்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 418042 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000ரொக்கம் வழங்கும் நிகழவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2023-ஐ தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக வேட்டி-சேலை ,1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை ஒரு முழுநீளக் கரும்புடன் ரூ.1000ரொக்கத் தொகை வழங்கிட ஆணையிடப்பட்டு, அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் , இன்றையதினம் சென்னையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது.சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 635 முழுநேர நியாயவிலைக் கடைகளும் 171 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 23 முழுநேர நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 829 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அந்தநியாய விலைக் கடைகள் மூலம் 392971 பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாயவிலைக் கடைகள் 25071 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 418042 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி,சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்குட்பட்ட 1215 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித சிரமமுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1 000 ரொக்கத்தினை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நியாயமான விலைக்கடைகள் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் சூழ்நிலையின் காரணமாக வர இயலாதவர்கள் மற்ற தேதிகளிலும் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் வாயிலாகப் பெறலாம். இதனை கருத்தில் கொண்டு,கூட்ட நெரிசலைத் தவிர்த்து தங்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தினை எந்த சிரமமுமின்றி பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு மத்திய கூட்டுறவு வங்கி மேலான் இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) பி.குழந்தைவேல், சரக துணைப்பதிவாளர் வே.பாலசந்திரன், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் , அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu