சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளை சார்ந்த 474 பேருக்கு சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளை சார்ந்த மொத்தம் 474 மாணாக்கர் களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்:
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓ. சிறுவயல் அரசு மேல்நிலைப் பள்ளி கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் செட்டியார் (பெண்கள்) உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி
பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அருணாச்சலம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட மு.சி.த.மு.சிதம்பரம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் , விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவிக்கையில்:
முத்தமிழிறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு அனைத்து துறைகளையும் சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்களாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அதில் கல்வித் துறையில் மாணாக்கர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வித் துறைக் கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த வருகிறார்கள்.
அந்தவகையில், இகல்வி வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் உயர்கல்வியில் இந்திய அளவில் 24 சதவீதம் உள்ளது. அதில் தமிழகம் 52உயர் கல்வியில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.
இதுபோன்று, பள்ளிக்கல்வித் துறையில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், பேருந்து பயண அட்டை , இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றோர்களின் சிரமத்தை குறைக்கின்ற பொருட்டு மாணாக்கர்களின் பெற்றோரின் நிலையிலிருந்து அனைத்தையும் வழங்கி வருகிறார்கள். அத்திட்டங்களில் ஒன்றாக சிறந்து விளங்கி வரும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வருகின்ற மாணாக்கர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தற்போது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவர் களுக்கும், 34 மாணவியர்களுக்கும்,
கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 55 மாணவர்களுக்கும், 35 மாணவிகளுக்கும், சிதம்பரம் செட்டியார் (பெண்கள்) உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 211 மாணவிகளுக்கும், பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அருணாச்சலம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 59 மாணவர்களுக்கும், 43 மாணவிகளுக்கும், கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட மு.சி.த.மு.சிதம்பரம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 5 மாணவர்களுக்கும், 12 மாணவிகளுக்கும் என 5 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 474 மாணாகர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நிறைந்த இந்த நவீன காலத்தில் மாணாக்கர்கள் தங்களது அறிவுத்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் பயில வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பயன் பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் அதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது பெற்றோர்களுக்கும் தங்களது ஆசிரியர்களுக்கும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு பெருமை சேர்த்திட வேண்டும்.
மேலும், மேற்கண்ட பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய பல்வேறு மேம்பாட்டு வசதிகள் குறித்து கோரிக்கைகளும் வரப்பெற்றுள்ளன. அக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கண்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்க தொகையாக முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10000-மும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5000மும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3000-மும் ,கூட்டுறவுத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
முன்னதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மொத்தம் 48 கடைகள், ஒரு கழிப்பறை ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மு.சரண்யா, பேரூராட்சி தலைவர்கள் கோகிலாராணி(திருப்பத்தூர்) கார்த்திக்சோலை(கோட்டையூர்), எஸ்.சாந்தி (பள்ளத்தூர்), ஆர்.ராதிகா(கானாடுகாத்தான்) மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பள்ளிக்கல்வி துறையை சார்ந்த அலுவலர்கள் , ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu