சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய செயல்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை அருகே காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவ்வூராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ,ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்றையதினம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விவரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஊராட்சிகளின் சார்பில், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.வீரராகவன், அலுவலக மேலாளர் ப.சுந்தரமகாலிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்-மாவட்ட ஆட்சியரகம்) மு.ஜோதீஸ்வரி, காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) க.ராஜேஸ்வரி, மேலாளர்கள் ம.பாலசந்திரபட்டு, பி.கல்பனா உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu