சிவகங்கையில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!

அதிமுக உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடந்தது.

அதிமுக உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடந்தது.

சிவகங்கை:

அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டையை மாவட்டக் கழகச் செயலாளர் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், முழுவதும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனைப்படி,கழக உறுப்பினர்களுக்கு, இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், உள்ள அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சக்கந்தி கிராமத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ,கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம் .எல். ஏ .கழக உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய கழகச் செயலாளர் செல்வமணி ,மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மணிமுத்து உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக நடந்து முடிந்த பார்லி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று முக்கிய நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகிறன்றனர். கட்சிக்குள் புகைச்சல் இருந்து வந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கு உறுப்பினர் ஆடைகள் வாழனும் நிகழ்ச்சிகளும் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!